/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/டில்லியை வர்ணிக்கும் ராணா தாஸ்குப்தா : இவர், இப்படி...!டில்லியை வர்ணிக்கும் ராணா தாஸ்குப்தா : இவர், இப்படி...!
டில்லியை வர்ணிக்கும் ராணா தாஸ்குப்தா : இவர், இப்படி...!
டில்லியை வர்ணிக்கும் ராணா தாஸ்குப்தா : இவர், இப்படி...!
டில்லியை வர்ணிக்கும் ராணா தாஸ்குப்தா : இவர், இப்படி...!
பிரபல எழுத்தாளர் ராணா தாஸ்குப்தா எழுதிய "சோலோ' என்ற நாவலுக்கு இந்தாண்டுக்கான காமன்வெல்த் எழுத்தாளருக்கான சிறந்த விருது கிடைத்துள்ளது.
பிரிட்டனில் பிறந்த ராணா தாஸ்குப்தா, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக டில்லியில் வசித்து வருகிறார். தற்போது, "மைஅடாப்டடு சிட்டி' என்ற நாவலை எழுதி வருகிறார். இதில், டில்லி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அந்த நகரத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த புத்தகத்தை எழுதி வருகிறார். டில்லி நகரத்தின் மக்கள் தொகை ஒன்றரை கோடியை தாண்டி விட்ட நிலையில், அங்கு இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி கால நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து இந்த புத்தகம் விரிவாக அலசும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களில் படித்த ராணா தாஸ்குப்தா, லண்டனில் மார்க்கெட்டிங் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர், நியூயார்க்கிலும் சில காலம் பணியாற்றினார். இதற்கு பின் டில்லிக்கு வந்த குப்தா, எழுத்து பணியில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது, எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என, ராணா தாஸ்குப்தாவிடம் கேட்டபோது, "என்ன விஷயங்களை எதிர் பார்க்கலாம் என்பது குறித்து தற் போது எதுவும் தெரிவிக்க முடியாது. இருந்தாலும், டில்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் பார்த்த விஷயங்களை மையமாக வைத்து, இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன்' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -